Friday, January 30, 2026

கல்முனையின் நூற்றாண்டு பழமைவாய்ந்த விவசாயிகளின் வீதி இந்த அரசாங்கத்தின் ஆட்சியிலாவது புணரமைக்கப்படுமா….?

Ad 728x90

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்முனையின் நூற்றாண்டு பழமைவாய்ந்த விவசாயிகளின் வீதி இந்த அரசாங்கத்தின் ஆட்சியிலாவது புணரமைக்கப்படுமா….?
✍️ எஸ்.எம்.எம்.றம்ஸான்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………
✅👉 கல்முனையின் பிரதான வீதியில் நகர மண்டபத்திற்கு முன்னால் மேற்குப்புறமாக அமைந்துள்ள ஸம் ஸம் ஹாஜியார் எனும் வீதி நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த விவசாயத்திற்காக விவசாயிகள் பயன்படுத்தி வந்த வீதியாகும்.
கல்முனையின் பிரதான வீதியிலிருந்து
இந்த வீதியானது வயலோடு இணைந்து சாய்ந்தமருது, மாளிகைக்காடு, மற்றும் காரைதீவு ஊடாக மாவடிப்பள்ளியின் பிரதான வீதியுடன் இணைகிறது.
இவ்வீதியினூடாக ஆரம்ப காலத்திலிருந்து விவசாயிகள் மாட்டு வண்டி மற்றும் உழவு இயந்திரம் போன்றவற்றை ஓட்டிச் சென்று தங்களது பல்வேறு விவசாய நவடிக்கைகளை பூர்த்தி செய்து கொண்டனர்.
காலப்போக்கில் இவ்வீதியால் விவசாயிகள் மாத்திரமன்றி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களும் தங்களுடைய பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.
இவ்வீதியால் விவசாயிகள் வயலுக்கு செல்வதற்கும் விவசாய பொருட்களை ஏற்றி செல்வதற்கும் விலங்குகளை வளர்ப்பவர்கள் விலங்குகளை கொண்டு செல்வதற்கும் நன்னீர் மீனவர்கள் மீன் பிடிக்க செல்வதற்கும் அதிகமா பயன்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நூற்றாண்டு காலமா இவ்வாறு நாட்டின் மிக முக்கியமான பொருளாதாரம் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி வந்த இவ்வீதியை பல தசாப்தங்களாக கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. காலத்துக்குக் காலம் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் மாறி மாறி அரசியல்வாதிகள் உருவாகிய காலத்திலும் கல்முனை மாநகர சபையின் முதுகெலும்பான இவ் வீதியை அந்த ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை இது தொடர்பாக பல தடவைகள் கோரிக்கைகளை மக்களும் சமூக நலன் போணுபவர்களும் விவசாயிகளும் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு தெரிவித்த போதிலும் இவ்வீதி புணரமைக்கப்பவில்லை.
கல்முனைமாநகரின் இவ்வீதி தொடர்பாக பல்வேறு கோணத்தில் செய்திகள் பிரசூரிக்கப்பட இருந்த போதும் அதை குறித்த சிலர் தடுத்து விட்டனர் ஆனால் தற்போது உள்ள நல்லாட்சியின் இவ்வீதி புணரமைக்கப்படுமா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
கல்முனை மாநகர சபையினை அலங்கரித்த அரசியல்வாதிகளும் சரி அதிகாரிகளும் சரி இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாது தேவையற்ற விடயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதும் அதிக வருமானம் கிடைக்கக்கூடிய கொந்தரத்துகளை எடுப்பதும் போன்ற செயற்பாடுகளிலேயே ஈடுபட்டனர் அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலைக்கு நோயாளிகளை கொண்டு செல்லும்போது ஏற்படும் வாகன நெரிசல் இடர்பாடுகளையும் இவ்விதியை புணரமைப்பதன் மூலம் தவிர்த்துக்கொள்ளலாம்.
சிறந்த வடிகால் அமைப்பு உருவாக்கக்கூடிய இந்த விவசாயிகளின் வீதியை சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கவனத்தில் எடுத்து நூற்றாண்டு பழமை வாய்ந்த இவ்வீதியை புணரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் இருகின்றார்கள்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்



SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: