Friday, January 30, 2026

வித்தியாரம்ப விழா…!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 வித்தியாரம்ப விழா…!
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……
✅👉 கல்வி அமைச்சின் புதிய சுற்று நிருபத்திற்கு அமைய 2026 ஆண்டில் தரம் ஒன்றிற்கு உள்வாங்கப்படும் சிறார்களுக்கு முறையாக வகுப்புகளை ஆரம்பிக்கும் வித்தியாரம்ப விழா "மகிழ்ச்சி புன்னகை மற்றும் அன்புடன் பாடசாலைக்கு" எனும் தொனிப்பொருளில் கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் 29/01/2026 வியாழன் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வு பாடசாலையின் முதல்வர் MSM. பைசால் (SLPS1) தலைமையில் இடம்பெற்றது.இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாடசாலை மேம்பாட்டு திட்ட இணைப்பாளரும் கல்முனை வலய தமிழ்பாட ஆசிரிய ஆலோசகருமான ஜெஸ்மி மூஸா அவர்களும் கௌரவ அதிதிகளாக பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி E.றினோஸ் ஹஜ்மின் மற்றும் உதவி அதிபர்களான திருமதி UL.ஹிதாயா, திருமதி MS. நஸ்மியா புகாரி
அவர்களும் விஷேட அதிதிகளாக பாடசாலை அபிவிருத்தி சங்க நிறைவேற்று குழு செயலாளர் SM நிம்சாத் (மௌலவீ), பாடசாலை பழைய மாணவர் சங்கச் செயலாளர் UL ஹாஜா, அவர்களும் அதிதிகளாக பாடசாலை பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை நிறைவேற்று குழு உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளால் மாணவர்களுக்கு அகரம் எழுதுதல் நிகழ்வும் நடைபெற்றதுடன் அதை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும்
இடம் பெற்றன.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்































SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: