𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 

…….
கல்லூரியினுடைய முகாமைத்துவப் பணிப்பாளர் ஆசிரியர் W.Iyoobkhan அவர்களுடைய தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி அவர்கள் கலந்து சிறப்பித்தார்
விஷேட அதிதிகளாக கல்முனை பிரதேச செயலகத்தினுடைய நிதி உதவியாளர் ASM.முஜாஹித் அவர்களும், வீரத்திடல் ஹிக்மா முஸ்லிம் வித்தியாலயத்தின் ஓய்வு பெற்ற அதிபர் MH.பதியுத்தீன் அவர்களும் சிரேஷ்ட ஆசிரியரும் சட்டத்திரணியுமான MK.இர்ஷாத்கான் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக கல்லூரியினுடைய கணிதப்பாட ஆசிரியர் IM.Shoofi அவர்களும் , வரலாற்றுப்பாட ஆசிரியர் CM.Falahi அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்...
மேலும் இந் நிகழ்வில் எமது கல்லூரியில் கல்வி கற்று இம்முறை (கா.பொ.த) சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
மேலும் இந் நிகழ்வில் எமது கல்லூரியில் கல்வி கற்று கடந்த வருடம் (கா.பொ.த) சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி 6A அதற்கு மேல் பெற்ற மாணவர்களும் ஹிஜா கல்லூரியில் கல்வி கற்று (கா.பொ.த) உயர்தரப் தரப் பரீட்சைக்கு தோற்றி பல்கலைகழகம், கல்வியற் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் அத்தோடு, எமது கல்லூரியில் தரம் 06 இல் கல்வி கற்று கொண்டிருக்கின்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களும் நினைவுச்சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்...
மேலும் இந் நிகழ்வில் மாணவர்களது பெற்றோர்கள், பாடசாலை அதிபர்கள் என பலர் கலந்து கொன்டனர்.
















0 comments: