
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 







இதனை தொடர்ந்து விவசாயிகளினதும், மக்களினதும் பாவனைக்கு உகந்தவகையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் டீ- 100 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 05 மில்லியன் ரூபாய் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொங்கிறீட் இடப்பட்டு செப்பனிடப்பட்ட சம்மாந்துறை கிடாமுல்லை ஆற்று வீதி நிறைவுப்பணிகளையும் இந்த கள விஜயத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் பார்வையிட்டார்.
இதன்போது விவசாயிகளை சந்தித்து விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களுக்கு கடந்த பெருவெள்ளத்தில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்ட போதும், வடிகாலமைப்பு, நீர்ப்பாசன குளங்கள் சேதமானபோதும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் முன்னெடுத்த வேலைத்திட்டங்களுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்ததுடன் வீதி அபிவிருத்திக்கும் தமது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இந்த விஜயத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல். நூருல் ஹுதா உட்பட முன்னாள் எம்.பி ஹரீஸ் அவர்களின் இணைப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments: