
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 







ஸதகா புல்லட்டின் மற்றும் பெமிலி ரிலீப் நிறுவனங்களின் பிரதிநிதியும் பொறியியலாளருமான எம்.சி.கமால் நிஷாத் அவர்களின் நெறிப்படுத்தலிலும், தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் தகரக் கொட்டில்களில் உள்ள மக்களின் கஷ்டங்களை போக்கும் நோக்கில் மூன்று வீடுகளுக்கான அடிக்கல் நடப்பட்டது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலய அதிபர் யூ.எல்.நசார், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு முன்னாள் உறுப்பினர் யூ.எல்.என். ஹுதா, ஆசிரியர் சிப்லி சம்சுதீன், பள்ளிவாசல் தலைவர், ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஸதகா புல்லட்டின் மற்றும் பெமிலி ரிலீப் நிறுவனங்களின் உதவியுடன் தொடர்ந்தும் இந்த பிரதேச மக்களுக்கு பொறியியலாளர் எம்.சி.கமால் நிஷாத் அவர்களினால் பல்வேறு சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் உள்ள அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத இந்த அரபா நகர் இகொக்குலான் கல் மக்கள் எதிர்நோக்கின்ற பிரச்சினைகள் சொல்லிலடங்காதவை. இப்பகுதி மக்களுக்கு மலசல கூட வசதி, மின்சார வசதி,வீதி அபிவிருத்தி, தெருவிளக்கு, மாலை வேளைகளில் உள்ள பாம்பு தொல்லை, யானைகளின் அட்டகாசம் என பல்வேறு வகையான பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளதை காண முடிகிறது. எனவே பொறுப்பு வாய்ந்தவர்கள் அனைவரும் இது தொடர்பில் கரிசனை செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 comments: