𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பினரின் கோரிக்கைக்கு இணங்க, உடனடி முடிவெடுத்து மின்தோற்றியை (Generator) கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபக தலைவரும் கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் வழங்கி வைத்தார்.
இந்த உத்தியோகபூர்வ வழங்கி வைப்பு நிகழ்வு (04) கல்முனை யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள், யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த உதவி, தற்போதைய சவாலான சூழ்நிலையில் மக்களுக்கு பெரும் நம்பிக்கையையும் நிவாரணத்தையும் வழங்கும் செயல் எனப் பாராட்டப்படுகிறது.








0 comments: