𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


தெரிவுசெய்யப்பட்ட நலிவுற்ற குடும்பங்களிலுள்ள மாணவர்களின் வீட்டிலிருந்து பாடசாலை கல்வியை தொடர்வதற்கான துவிச்சக்கரவண்டி வழங்கும் வேலைத்திட்டம் நடைபெற்று வருகின்றது.
இத்திட்டத்தினூடாக இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட இரு மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டிகள் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.
இறக்காமம் கல்விக் கோட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இதனூடாக பாடசாலை இடைவிலகளை தவிர்த்து, அவர்களின் பாடசாலைக் கல்வி மற்றும் கற்றல் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் இவ் உதவித்தட்டம் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும், இந்நிகழ்வில்
உதவிப் பிரதேச செயலாளர் திருமதி ஏ.கே. றொஷின்தாஜ் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் தெரிவுசெய்யப்பட்ட மாணவருக்கு துவிச்சக்கரவண்டியினை வழங்கிவைத்தார்.
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம். சப்றின், பிரிவுக்கான கிராம உத்தியோகத்தர் ஏ.எல். ஹுசைன், உளவளத்துணை உவியாளர் ஏ.எச்.றகீப், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்டாட், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.ஐ. பஸீனா மற்றும் பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர் எம்.ஜி. சுவர்னா ஹேமலதா
ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.



0 comments: