𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


குரு ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாக இடம்பெற்ற இவ்விருது வழங்கல் விழாவில் மயோன் குரூப் நிறுவனத்தின் தவிசாளரும், சமூக செயற்பாட்டாளருமான மயோன் எடுகேஷன் எய்ட் தலைவர் எம்.எம்.றிஸ்லி முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார்.
மேலும் வசந்தம் தொலைக்காட்சி முகாமையாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.இர்பான் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு ஊடகப்பரப்பில் நவீன ஊடகங்கள் தொடர்பிலும், ஊடக வளர்ச்சி தொடர்பிலும் உரையாற்றி விருதாளர்களுக்கு கௌரவமளித்தார். மேலும் இந்நிகழ்வில் சட்டத்தரணி எம்.கே.எம்.பர்சான், நெஸ்ட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் என்.எம்.சப்னாஸ், டொப் பிரிண்டிங் நிறுவன பணிப்பாளர் எம்.ஐ.எம்.மர்லியாஸ் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
ஊடகத்துறையில் சிறந்த சாதனையாளர்களை உலகிற்கு அடையாளங்காட்டும் இந்த விருது வழங்கல் விழாவில் விவரணம், சுகாதாரம், சுற்றாடல் எழுத்தாளர்,மனிதாபிமான உரிமை தொடர்பான ஊடகவியலாளர்கள், வானொலி அறிவிப்பாளர்கள், விளையாட்டு செய்தி அறிக்கையாளர், சிறந்த இளம் யூடியுப்பாளர்கள், கட்டுரை எழுத்தாளர், ஊடகத்துறையின் வாழ்நாள் சாதனையாளர் போன்ற பல்வேறுபட்ட துறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.












0 comments: