𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


பாலமுனை பிரதேசங்களில் நீர் வசதியின்றி வாழ்ந்து வந்த தேவையுடைய குடும்பங்களுக்கு, கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் பொதுக்கிணறுகள் அமைத்து வழங்கும் நிகழ்வு வெற்றிகரமாக இன்று (10) இடம்பெற்றது.
பிரதேச மக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில்,
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளர் மற்றும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் இந்த நற்செயல் முன்னெடுக்கப்பட்டது.
மிகக் குறுகிய காலத்திற்குள் திட்டமிட்டு செயல்பட்ட பவுண்டேசன், இப்பொதுக்கிணறுகளை பயனாளிகள் பாவனைக்காக திறந்து வைத்தது.
இந்த நிகழ்வில் பயனாளிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பவுண்டேசன் உறுப்பினர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
மேலும் நிகழ்வின் சிறப்பம்சமாக, பிரதம அதிதியின் பொற்கரங்களால் தென்னை மரம் நட்டு வைக்கப்பட்டது.
பிரதேச மீனவ மக்கள் இதனை ஒரு பெரும் நிவாரணமாகவும், நீண்டகால முயற்சிக்கான வெற்றியாகவும் வரவேற்றனர்.
நீர் வசதியின்மை என்பது இன்று பலரை பாதிக்கும் முக்கிய பிரச்சினையாகிய நிலையில், ரஹ்மத் பவுண்டேசன் எடுத்துள்ள இந்த படைப்பு முயற்சி, சமூகத்தின் அடித்தள மக்களுக்கு வாழ்வூக்கமளிக்கிறது.
"பதவியின்றி சமூகத்தின் மனங்களில் பதியச் செயல் புரிவதே உண்மையான சேவை" என்ற செய்தியை நினைவூட்டும் வகையில், ரஹ்மத் மன்சூர் அவர்கள் வழிகாட்டிய இச்செயற்பாடு பெரிதும் பாராட்டப்படுகிறது.











0 comments: