Friday, September 12, 2025

இனவாதமற்ற ஆளுநரின் பணி; அனைத்து இன மக்களும் பாராட்டு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 இனவாதமற்ற ஆளுநரின் பணி; அனைத்து இன மக்களும் பாராட்டு..!
✍️ எஸ். சினீஸ் கான்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கிழக்கு மாகாணம் என்பது தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்கள் வாழ்ந்து வரும் ஒரு தனித்துவமான மாகாணமாகும். இங்கு இன, மத வேறுபாடுகளை தாண்டி நல்லிணக்கம் நிலைநிறுத்தப்படுவது மிக அவசியமானதாகும். அந்த வகையில், கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர அவர்கள் மேற்கொண்டு வரும் செயல்பாடுகள், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
அவர் ஆளுனராக பொறுப்பேற்ற நாள்முதல், இனவாதமற்ற பார்வையுடன் அனைத்து மக்களையும் ஒரே பார்வையில் கண்டுகொண்டு, சமநீதியை நிலைநிறுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறார். தமிழ், சிங்களம், முஸ்லிம், கிறிஸ்தவம் என மூவின மக்களிடையேயும் சமத்துவம் நிலைநிறுத்தும் நோக்கில் அவர் செயல்படுவது, சமூக நல்லிணக்கத்திற்கான ஒரு பாலமாக மாறியுள்ளது.
அபிவிருத்தி பணிகளுக்காக அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்து, கல்வி, சுகாதாரம், வீதிகள், குடிநீர், தொழில் முனைவோர் வளர்ச்சி போன்ற துறைகளில் கணிசமான முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக, பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்கும் முயற்சிகள் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளன.
மேலும், மக்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றும் வேகமான செயல்முறைகள் அவரது ஆட்சியின் சிறப்பம்சமாக அமைந்துள்ளது. பொதுமக்கள் குறைகளை நேரடியாகக் கேட்டு, அவற்றை தீர்த்து வைக்கும் அவரது தன்மை, மக்களிடையே நம்பிக்கையையும் மதிப்பையும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு, இன-மத வேறுபாடுகளை மீறி சமத்துவ ஆட்சியை நிலைநிறுத்துவதோடு மட்டுமல்லாமல், அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக ஆக உழைக்கும் கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் பணி கிழக்கு மாகாண மக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: