𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்குப் பிரதம அதிதியாக முன்னாள் கல்முனை பிரதேச செயலாளரும், அமைச்சின் செயலாளரும், மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினருமான அஷ்ஷேஹ் எம்.ஐ. அமீர் (நழிமி) அவர்களும், விசேட அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஆங்கிலப் பாட ஆசிரிய ஆலோசகரும், EPSI இணைப்பாளருமான திரு: ஏ.எல்.எம். ஆரிப் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கண்மணி நாயகம் முகம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு அவர்களுடைய மார்க்கப் போதனைகள், இன ஐக்கியம் தொடர்பாக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எடுத்துரைக்கப்படன. அத்துடன் மாணவர்களின் இஸ்லாமிய கலை நிகழ்வுகளும், பேச்சு, கவிதை , கீதா என்பனவும் இடம் பெற்றன.
மேலும் இந்நிகழ்வைச் சிறப்பிக்கும் முகமாக மாணவர்களுக்கு நாரிசா உணவும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்விழாவை திறன்பட ஏற்பாடு செய்து நடாத்தி முடித்த விழாக் குழுவினர்களுக்கு அதிபர் அவர்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டார்.



















0 comments: