Tuesday, September 30, 2025

சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற அமர்வு..!

Ad 728x90

 


✅👉 சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற அமர்வு..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கல்வி அமைச்சின் 03/2019 சுற்றறிக்கைக்கு இணங்க, கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர்களின் ஜனநாயக விழிப்புணர்வையும் தலைமைத்துவத் திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில், மூன்றாவது மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஏனைய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களின் பங்கெடுப்புடன் நடைபெற்ற இந்த மூன்றாவது மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை சபை செயலாளரும், அதிபருமான எம்.சி.எப். நஸ்லின் ரிப்கா அன்ஸார் உத்தியோகபூர்வமாக தொடக்கி வைத்தார்.
இவ்வமர்வில் மாணவர் பாராளுமன்றத் தலைவரும் (சபாநயகர்) பிரதமர், அமைச்சர்கள், சபை பிரதானிகள், உறுப்பினர்களும் தங்கள் பொறுப்புகளை உணர்வுடன் நிறைவேற்றினர். கல்வி, விளையாட்டு, கலாச்சாரம், சமூக சேவை, ஒழுக்கம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பான கருத்துக்களும் முன்மொழிவுகளும் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களினால் விவாதிக்கப்பட்டன.
அமர்வில் கலந்து கொண்ட அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்கள் மாணவர்களின் ஜனநாயக பங்களிப்பு மற்றும் பொறுப்புணர்வை பாராட்டி, எதிர்காலத் தலைமைத்துவ வளர்ச்சிக்கு இது போன்ற நிகழ்வுகள் முக்கிய பங்காற்றுவதாகத் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வு, மாணவர்களுக்கு கருத்து தெரிவிக்கும் சுதந்திரம், ஒருங்கிணைந்த செயல் திறன், ஜனநாயக மரபுகள் ஆகியவற்றை அனுபவபூர்வமாக கற்றுத் தரும் வகையில் அர்த்தமிக்க ஒரு தளமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்









SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: