Tuesday, September 30, 2025

கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரியின் (தேசிய பாடசாலை ) 18 வது அதிபராக சித்தி சமதா கடமையேற்பு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரியின் (தேசிய பாடசாலை ) 18 வது அதிபராக சித்தி சமதா கடமையேற்பு..!
✍️ எஸ்.எம்.எம்.றம்ஸான்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரியின் (தேசிய பாடசாலை) 18வது புதிய அதிபராக இலங்கை அதிபர் சேவையின் வகுப்பு - I ஐ சேர்ந்த ஹாஜியானி சித்தி சமதா முகம்மது மஸ்ஸுது லெவ்வை அண்மையில் பதவி ஏற்றார்.
இப் பாடசாலையின் பழைய மாணவியான இவர் இப்பாடசாலையிலிருந்து விவசாய பீடத்திற்கு தெரிவான முதல் மாணவியாவார்.
1996 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து விவசாயத்துறையில் விசேட பட்டம் பெற்று வெளியான இவர் 1998 ஆம் ஆண்டு ஆசிரியராக முதல் நியமனம் பெற்று கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரியில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இங்கு தொடர்ச்சியாக 14 வருடங்கள் கல்வி பொது தராதர உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு கற்பித்து கொடுத்ததன் மூலம் பல மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுக் கொள்வதற்காக அர்ப்பணிப்புடன் பணி பற்றிய ஆசிரிய பெருந்தகை ஆவார்.
2012 ம் ஆண்டு இலங்கை அதிபர் சேவையில் இணைந்து கொண்ட இவர் அன்று முதல் இன்று வரை தொடர்ச்சியாக இப்பாடசாலையின் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதி அதிபராக பணியாற்றி வருகின்றார்.
2018 ம் ஆண்டு தொடக்கம் இலங்கை அதிபர் சேவையின் வகுப்பு ஒன்றிற்கு பதவி உயர்த்தப்பட்ட இவர் தொடர்ச்சியாக இப்பாடசாலையின் நிர்வாகத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்துள்ளார்.
2023 ம் ஆண்டு இப்பாடசாலையில் அதிபராக கடமையாற்றிய யூ எல் எம் அமின் ஓய்வு பெற்று செல்லும் போது பாடசாலையின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட நிலையில் அப்பதவியில் தொடர முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டார்.
பாடசாலை நிர்வாகம், முகாமைத்துவம் போன்றனவற்றில் மிகுந்த அனுபவமும், சிறந்த நிர்வாக திறனும், ஆளுமையும் கொண்ட இவர் மீண்டும் இப் பாடசாலையின் அதிபராக கடமை ஏற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடமைகளை பொறுப்பபேற்ற புதிய அதிபருக்கு இப்பிரதேசத்தின் கல்வி சமூகம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இவரது பணி சிறபிற்க எமது இணையத்தள நிருவாகமுமம் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு
ஊர்௧ளை இணைக்கும் பாளமா௧ இவ் அதிபர் இருக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறோம்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: