𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


முகாமைத்துவப் பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளரும், கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளருமான திரு யூ.எல்.றியால் அவர்களின் ஏற்பாட்டிலும், முறைசாராக் கல்விக்குப் பொறுப்பான திரு எம்.எம்.சியாம் (வளவாளர்) அவர்களின் நெறிப்படுத்தலிலும் இன் நடைபவனி மேற்கொள்ளப்பட்டது.
இதில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் வளவாளர்கள் , ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் இந்த நடைபவனியில் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
அல் பஹ்றியா மகா வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பவனியானது கல்முனை கடற்கரைப் பள்ளிவாயல் கரையோர வீதியினூடாகச் சென்று கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையை அடைந்தது. இவ்வூர்வலத்தில் கல்முனை வலயத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பத்துப் பாடசாலைகள் பங்குபற்றின.
இதில் மாணவர்களையும், பொதுமக்களையும் விழிப்பூட்டும் வீதி நாடகங்களும் மாணவர்களால் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.












0 comments: