Tuesday, September 30, 2025

“அயலக ஆளுமைகளுக்கு அலங்காரம்” நிகழ்வு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 “அயலக ஆளுமைகளுக்கு அலங்காரம்” நிகழ்வு..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 “அயலக ஆளுமைகளுக்கு அலங்காரம்” எனும் தொனிப்பொருளில் தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர்” விருது பெற்ற இந்திய முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கான பாராட்டு நிகழ்வும், இசை முரசு மர்ஹூம் நாகூர் ஈ.எம்.ஹனிபா அவர்களின் பிறந்த நூற்றாண்டு நினைவேந்தல் நிகழ்வும் மகுட விழாவாக கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (19) மாலை விமரிசையாக நடைபெற்றது.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர் கெளரவ. ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் கெளரவ. ரிஷாத் பதியுதீன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் திரு. என்.எம்.அமீன் ஆகியோர் முன்னிலை வகித்த இந் நிகழ்வில் இலங்கைப் பாராளுமன்ற பிரதி சபாநாயகர் டொக்டர் ரிஸ்வி சாலி, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், ஆகியோர் முதன்மை அதிதிகளாகவும்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும் கல்முனை முன்னாள் மாநகரசபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் பல அதிதிகள் கலந்து இவ்விழாவினை சிறப்பித்தனர்.

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
























SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: