Thursday, September 18, 2025

அல்- மீஸான் பௌண்டசனின் 20 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் பேர்ல்ஸ் சீஸன் 04 கௌரவிப்பும்..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 அல்- மீஸான் பௌண்டசனின் 20 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் பேர்ல்ஸ் சீஸன் 04 கௌரவிப்பும்..!
✍️ மாளிகைகாடு செய்தியாளர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 அல்- மீஸான் பௌண்டசனின் 20 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் பேர்ல்ஸ் சீஸன் 04 கௌரவிப்பும் பௌண்டசனின் தவிசாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணைக்குழு முன்னாள் உறுப்பினருமான யூ.எல்.என். ஹுதா உமரின் தலைமையில் சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
கல்முனை வீகாஸ் கெம்பஸின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன், கிழக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழு செயலாளர் ஜே. லியாக்கத் அலி ஆகியோர் பிரதம அதிதியாகவும், நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எல்.ஏ. லத்தீப், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாண பிரதிப்பணிப்பாளர் பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ் ஆகியோர் கௌரவ அதிதியாகவும், கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவி சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிக்கா சறூக் காரியப்பர், நளீர் பௌண்டஷன் தலைவர் எம்.ஏ. நளீர், திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எச். அல் ஜவாஹிர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இதன்போது மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி பதவி உயர்வு பெற்ற சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரிகள், கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள், கல்முனை கல்வி வலயத்திலிருந்து 09 ஏ சித்திகளை பெற்ற 130 மாணவர்கள், சர்வதேச அளவில் மற்றும் தேசிய அளவில் சாதித்த சாதனையாளர்கள், முஸ்லிம் பாடசாலைகளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியினர், சமூக சேவகர்கள் என பலரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இந்நிகழ்வில் அல்- மீஸான் பௌண்டசனின் ஆளுநர் சபையினர், செயற்குழுவினர், பாடசாலைகளின் அதிபர்கள், கல்விமான்கள், பொது அமைப்பின் பிரதானிகள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்












SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: