Friday, August 29, 2025

புதிய 2000 ரூபாய் தாள் இ.ம.வங்கி ஆளுநரால் ஜனாதிபதியிடம் கையளிப்பு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 புதிய 2000 ரூபாய் தாள் இ.ம.வங்கி ஆளுநரால் ஜனாதிபதியிடம் கையளிப்பு..!
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய ரூபாய் 2000 நினைவுத்தாள் இன்று (29) காலை வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவினால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கிவைக்கப்பட்டது.
இது புழக்கத்திற்கான நினைவுத்தாள் என வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட ஐந்தாவது நினைவுத்தாள் இதுவாகும்.
வளர்ச்சிக்கான அடித்தளமான பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் மத்திய வங்கியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், 'செழிப்புக்கான ஸ்திரத்தன்மை' எனும் ஆண்டு விழா கருப்பொருளின் கீழ் இந்த நினைவுத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநயக்க, இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கே.எம்.ஏ.என் தௌலகல, உதவி ஆளுநர் கே.ஜி.பி சிறிகுமார, நாணயத் திணைக்களத்தின் தலைவர் பி.டி.ஆர் தயானந்தவும் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்



SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: