𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


கல்முனை பிரதேசத்தில் மிகவும் தேவையுடைய ஒரு குடும்பத்தின் நீண்டகாலத் தேவையாக மின்சார இணைப்பு காணப்பட்டது.
இக் குடும்பத்தின் கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு என பலதரப்பட்ட துன்பங்களைச் சுமந்த அந்தக் குடும்பத்தின் நிலையை மனதில் கொண்டு, அவர்களுக்காக ஒளியின் வாயிலாக ஓர் புதிய பாதையை உருவாக்கி வைத்தது ரஹ்மத் பவுண்டேசன்.
YWMA அமைப்பின் அனுசரணையுடன் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களினால் இந்த முயற்சி விரைவாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது.
இது மாதிரியான ஒவ்வொரு சேவையும், ரஹ்மத் மன்சூர் அவர்களின் மனிதநேய உந்துதல் மற்றும் சமூக மாற்றத்திற்கான உறுதியை பிரதிபலிக்கின்றது. அதிகாரத்தின் பலத்தால் அல்ல, ஆனால் உணர்வின் ஆழத்தால் சமூகத்தில் ஒளி பரப்பும் இத்தகைய பணி, இன்னும் பலருக்கு புதிய நம்பிக்கையைத் தரும்.
இருளில் இருந்த குடும்பத்துக்கு இன்று ஒளியும், வாழ்வுக்கும் தொடக்கமாக அமைந்தது – ரஹ்மத் பவுண்டேசனின் இளகிய இதயத் தொண்டு!
இந்நிகழ்வில் பயனாளிகள், நலன்விரும்பிகள், பவுண்டேசன் உறுப்பினர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.






0 comments: