

கல்முனை ரஹ்மத் ப
வுண்டேசனின் 2025 ஆண்டுக்கான மூன்றாம் கட்ட பெண் தலைமைத்துவ குடும்பம் மற்றும் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார வேலைத்திட்டம்..!

ஏ.எஸ்.எம்.அர்ஹம்


பெண் தலைமைத்துவ குடும்பம் மற்றும் வறிய குடும்பங்களை சேர்ந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார வேலைத்திட்டதின் கீழ் இந்த ஆண்டுக்கான மூன்றாவது கட்ட வேலைத்திட்டம் (13) ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான கௌரவ ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக CSWMA பேரவையின் தலைவி சகோதரி சீனியா தாஷிம், YWMA பேரவையின் தலைவி சகோதரி பவாஸா தாஹா அவர்களும் கல்முனை சமூக சேவை உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜெய்ஸான், ரஹ்மத் மன்சூர் அவர்களின் அன்பு தாயார் சுஹாரா அவர்களும் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முகாமையாளர் வைத்தியர் சனா, மௌலவி ரியாஸ் மற்றும் பவுண்டேசனின் உயர்பீட உறுப்பினர்கள், பயனாளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
0 comments: