Sunday, June 15, 2025

கல்முனை Friendly Guiders பவுண்டேசனினால் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 கல்முனை Friendly Guiders பவுண்டேசனினால் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கல்முனை Friendly Guiders பவுண்டேசனினால் கமு/அல் - அஸ்ஹர்
வித்தியாலயத்தில் தரம் 9 கல்வி கற்கும் மாணவர்களுக்கு இரண்டு நாள் செயலமர்வாக Career Guidance செயலமர்வு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (29) இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அமீனாஷ் ஜுவல்லரியின் முகமைத்துவ பணிப்பாளர் ARM.KEYAS அவர்கள் கலந்து கொண்டதுடன் வளவாளராக மேஜர் KM.THAMEEM அவர்களும், கெளரவ அதிதிகளாக பாடசாலையின் பிரதி அதிபர்களான MHM.IZZATH, SMS.RIZANA ஆகியோர் கலந்து கொண்டதுடன் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பவுண்டேசனின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் தலைமையுரை மற்றும் வரவேற்பு உரையினை FRIENDLY GUIDERS பவுண்டேசனின் ஸ்தாபக தலைவரும் சிரேஷ்ட இளம் ஊடகவியலாளரும் பிரபல சமூக சேவையாளருமான ASM. ARHAM அவர்கள் நிகழ்த்தியதுடன் பிரதம அதிதி உரையினை கல்முனை அமீனாஷ் ஜுவல்லரியின் முகமைத்துவ பணிப்பாளர் ARM.KEYAS அவர்கள் உரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து வளவாளராக வருகை தந்த மேஜர் KM.THAMEEM,பிரதி அதிபர் MHM.IZZATH ஆகியோர் உரையாற்றியதுடன் அதனைத் தொடர்ந்து செயலமர்வு பற்றிய தங்களது கருத்துக்களை மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.
மேலும் குறிப்பாக வரவேற்பு உரையினை அமைப்பின் ஸ்தாபக தலைவரும் சிரேஷ்ட இளம் ஊடகவியலாளரும் பிரபல சமூக சேவையாளருமான ASM.ARHAM அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது " எமக்கு இந்த நிகழ்வை ஒழுங்கான முறையில் செய்து முடிப்பதற்கு உதவிய வளவாளரான மேஜர் KM.THAMEEM அவர்களுக்கும் அதனை நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கி செயற்பட்ட மாணவ, மாணவிகளுக்கும் இந் நிகழ்விற்கு பண உதவிகளையும் அனுசரணைகளையும் வழங்கிய கல்முனை மூகையீதின் பெரிய பள்ளிவாசலின் பொருளாளரும் பிரபல தொழிலதிபரும் சமூக சேவையாளருமான SM.RIFNAS அவர்களுக்கும் அமீனாஷ் ஜுவல்லரியின் முகமைத்துவ பணிப்பாளர் ARM.KEYAS அவர்களுக்கும் சிரேஷ்ட கணித பாட ஆசிரியரும் தொழிலதிபருமான MHM.FAYIS அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு இந் நிகழ்வு நடத்துவதற்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அனுமதிதந்து ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலையின் அதிபர் AH.ALI AHBAR அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு இந்த சமூக சேவை பணியில் ஈடுபடுவதற்கு உச்சகப்படுத்தி வழிகாட்டிய எனது அரசியல் குரு கல்முனை முன்னாள் மாநகரசபை பிரதி முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களுக்கும் விஷேடமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் அவர் செய்து கொண்டிருக்கும் பல சமூக சேவைகள் போன்று எமது மக்களுக்கு என்னால் முடிந்த சேவைகளை முன்னேடுப்பாதே எனது நோக்கம் என்று கூறினார்.
மேலும் இந்நிகழ்வின் இறுதி அம்சமாக பிரதம அதிதி, வளவாளராக்கான நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்






















SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: