Sunday, June 15, 2025

மனித உரிமை பணிக்கான அமைப்பினால் நூல்கள் வழங்கும் நிகழ்வு.

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 மனித உரிமை பணிக்கான அமைப்பினால் நூல்கள் வழங்கும் நிகழ்வு.
( ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்)
✅👉 மனித உரிமை பணிக்கான அமைப்பின் கிழக்கு மாகாண அமைப்பாளர் ஜனாப் எம்.எப்.எம். பாறூக் தலைமையில் ஏறாவூர் மட் அல் அஸ்ஹர் பெண்கள் உயர் தர பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது.
நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி பணிமனையிலிருந்து எம்.எல்.ஏ.சபூர்(ஐ எஸ்.ஏ) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், கௌரவ அதிதிகளாக பொலிஸ் நிலைய நிருவாகப் பொருப்பதிகாரி, சப் இன்ஸ்பெக்டர் எஸ். எல்.சறூக், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சி.நஜிமுதின், ஆகியோரும்,விசேட அதிதிகளாக மனித உரிமை அமைப்பின் இணைப்பாளர் றிபாட் யாசீன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு "மன நலம் பேனுவோம் உடல் நலம் காப்போம் "எனும் நூல் சுமார் நூறு மாணவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் அதிதிகளுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த மாணணவ சமூகத்தை உருவாக்க. வேண்டு மென்றும்,வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தவும் ,அதன் மூலம் மாணவர்களின் அறிவுக்கு விருந்தாக இந்நூல் அமையப் பெற்று இருப்பது கண்டு அதிதிகள் தங்கள் உரையில் சிறப்புரையாற்றினர். மனித உரிமை பணிக்கான அமைப்பின் செயலாளரும் நூலாசிரியருமான அல்ஹாஜ் அப்துல் கபூர் அவர்களின் விசேட செய்தி ஒன்றினை செய்தியாளர் பாத்திமா றிஸ்னி அவர்களால் வாசிக்கப்பட்டதானது வரவேற்பை பெற்றிருந்தது. நூல் பற்றிய கருத்துரையை அமைப்பின் இணைப்பாளர் றிபாட் யாஸீன் வழங்கினார். சமூகசேவை உத்தியோகத்தர் உரையாற்றும் போது இவ்வாறான ஏற்பாட்டை செய்து இவ்வாறான நூல் களை மாணவர்களுக்குபெற்றுக் கொடுக்க ஏற்பாடு பண்ணிய ஏற்பாட்டுக் குழுவுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அறிவு பூர்மான நல்ல பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பது கண்டு பெருமிதம் அடைவதாக கூறினார். பிரதம அதிதி சபூர் சேர் அவர்கள் மாணவர்களுக்கு கிடைத்துள்ள சிறந்த நூலை நன்கு பயன்படுத்தி சகல விடயத்துக்கும் தேவையான அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள பயன்படுத்த வேண்டு மென்றார். பாடசாலை மாணவர்களுக்கு அதிதிகளால் நூல்கள் வழங்கப்பட்டு நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
























SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: