Sunday, June 15, 2025

அட்டாளைச்சேனை விவசாயிகளின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு 2025 - 06 - 01

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
அட்டாளைச்சேனை விவசாயிகளின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு
2025 - 06 - 01
(ஊடகப்பிரிவு NPP அட்டாளைச்சேனை)
அட்டாளைச்சேனை சம்புக்களப்பு தில்லையாற்றின் நிலைமை குறித்து
அட்டாளைச்சேனை வழளாவாய் மேற்கண்ட விவசாய அமைப்பினுடைய தலைவர்
அல்ஹாஜ் ACM Sameer
செயலாளர்
AL நூஹு முஹம்மத் TR
வயற்கானி உரிமையாளர்களான
A அப்துல் வாஹிட் ஒய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகர்
UK இஸ்மாயில் ஒய்வு பெற்ற பொறியியளாளர்
இமாமுதீன் சமுர்த்தி முகாமையாளர்
ஆகியோரடங்கிய குழுவொன்று
கடந்த மாதம் அட்டாளைச்சேனை தேசியமக்கள் சக்தியினுடைய( NPP) மத்திய குழுவுடனும்
அம்பாறை மாவட்ட ஆளும்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் A.ஆதம்பாவா ஆகியோருடனும் சந்திப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது
இச்சந்திப்பில்
தில்லை ஆற்றை செப்பனிடுதல் சம்பந்தமான வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தனர்
அதன் அடிப்படையில் விரைவாக செயற்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் A.ஆதம்பாவா அவர்கள்
நீர்ப்பாசன திணைக்களத்தின் அதிகாரிகளோடு கலந்துரையாடி குறிப்பிட்ட வேலையை அவசரமாக செய்து முடிக்குமாறு பணித்திருந்தார்
இதற்கமைய
நீர்ப்பாசணத் திணைக்களத்தின் பொறியியலாளர் சகோதரர் S.சுகீதரன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரோடும்
குறிப்பிட்ட விவசாய அமைப்பினரோடும் தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழுவினரோடும் உரிய இடத்திற்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு செப்பெனிடும் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்கள்
அல்ஹம்துலில்லாஹ்
இன்று அந்த வேலைகள் 90 சதவீதம் பூர்த்தி அடைந்த நிலையில் அதனை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்த
பாராளுமன்ற உறுப்பினர் A.ஆதம்பாவா
மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினுடைய
தலைவர் தோழர் ஏ.எம். அர்பான்
அமைப்பாளர் எஸ். எம். றியாஸ்
செயலாளர் வஹாப் ரிஷாட்
மற்றும் ஏனைய வட்டாரத் தலைவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்
அத்தோடு குறிப்பிட்ட தில்லையாற்றின் இரு மருங்கினையும் பாதைகள் அமைத்து எதிர்காலத்தில் அந்தப் பகுதியை ரம்யமான ஒரு சூழலாக மாற்றி சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய அளவுக்கு அதனை உருவாக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கையினை தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை மத்திய குழு பாராளுமன்ற உறுப்பினரிடம் வேண்டுகோளாக விடுத்திருந்தனர்
பாராளுமன்ற உறுப்பினரும் அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் அதனையும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்
அல்ஹம்துலில்லாஹ்
பாராளுமன்ற உறுப்பினர் தோழர் A.ஆதம்பாவா அவர்களுக்கும்
களத்தில் நின்று இந்த வேலைகள் முடியும் வரை தனது நேர காலங்களை ஒதுக்கிய விவசாய அமைப்பினுடைய தலைவர்
ACM . சமீர் ஹாஜியார் அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு சார்பாக விசேடமான நன்றிகள்.

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்







SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: