𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


தூர இடங்களிலிருந்து கல்முனை பிராந்தியத்திற்கு பல்வேறுபட்ட தேவைகளுக்காக வருகை தருபவர்கள் புனித நோன்பினை நோற்பதற்கான ஸஹர் உணவை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவது கல்முனையன்ஸ் போரத்தின் கவனத்திற்கு எட்டப்பட்டதினால் இச்செயற்றிட்டம் கடந்த ஏழு வருடங்களாக தொடர்ந்து தங்குதடையின்றி முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
இத்திட்டத்தின் மூலம் இவ்ரமழான் முழுவதும் மொத்தமாக 5438 ஸஹர் உணவு ஏற்பாடுகளை கல்முனை, மருதமுனை, சாய்ந்தமருது மற்றும் காரைதீவு ஆகிய பிரதேசங்களுக்கு எவ்வித தடைகளுமின்றி உரிய ஸஹர் நேரத்திற்கு நோன்பாளிகளின் காலடிக்கே சென்று எம்மால் வழங்க முடிந்தது.
மேற்படி ஸஹர் உணவானது ரமழான் காலத்தில் மாலை 5:00 மணியிலிருந்து இரவு 7:00 வரைக்கும் தொலைபேசியூடாக கிடைக்கப்பெறும் முன்பதிவுகள் அடிப்படையில் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


0 comments: