Wednesday, April 2, 2025

எட்டாவது ஆண்டாக வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட ஸதகதுல் ஈத் - 2025..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 எட்டாவது ஆண்டாக வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட ஸதகதுல் ஈத் - 2025..!
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாட வழியின்றி தவிக்கும் குடும்பங்கள் சந்தோசமாக பெருநாளைக் கொண்டாடும் பொருட்டு கல்முனையன்ஸ் போரமினால் வருடாந்தம் ரமழான் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஸதகதுல் ஃபித்ர் செயற்றிட்டம் இம்முறை “ஸதகதுல் ஈத்” என பெயர்மாற்றம் செய்யப்பட்டு எட்டாவது ஆண்டாக இவ்வருடமும் இறைவனின் உதவியால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரமழானின் ஆரம்ப பகுதியில் வழங்கப்பட்ட உண்டியல்கள் மூலமாக சேகரிக்கப்பட்டவையூடாகவும், நிதி மற்றும் பொருள் அன்பளிப்பாக பெறப்பட்டவற்றைக் கொண்டும் இணங்காணப்பட்ட தேவையுடைய 160 குடும்பங்கள் பயனடையும் படி பகிர்ந்தளிக்கப்பட்டன.
புனித நோன்புப் பெருநாளைக்கொண்டாட தேவையான ரூபா 4000 பெறுமதியான உணவுப்பொதிகள் 150 குடும்பங்களுக்கும், ரூபா 5000 படி 10 குடும்பங்களுக்கு நிதியாகவும் கடந்த 30-03-2025 அன்று இரவு பகிர்ந்தளிக்கப்பட்டன.
பகிர்ந்தளிக்கப்பட்ட உணவுப்பொதியில்;
அரிசி - 5Kg
கோழியிறைச்சி - 1Kg
சீனி - 1kg
பருப்பு - 1/2kg
கஸ்டர்ட் - 01
ஜெலி - 01
1/2 kg பெரிய வெங்காயம்
1/2 kg தக்காளி
1/4kg பச்சை கொச்சிக்காய்
1/4kg கத்தரி
1/2kg சின்ன வெங்காயம்
1/2kg உருளைக்கிழங்கு
1 தேங்காய் போன்ற பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட தேவையான உணவுப்பொருட்கள் உள்ளடங்கியிருந்தது.
இதற்கான பயனாளிக்குடும்பங்கள் கல்முனை, இஸ்லாமபாத் ஆகிய பிரதேசங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்..!
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: