Monday, March 3, 2025

ரமழான் மாதத்தையொட்டி கல்முனை பிராந்தியத்தில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை..!

Ad 728x90

 


✅👉 ரமழான் மாதத்தையொட்டி கல்முனை பிராந்தியத்தில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை..!
✍️நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 ரமழான் மாதத்தை முன்னிட்டு கல்முனை பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் (25) பழக்கடைகள், ஹோட்டல்கள், வெதுப்பகங்கள், வியாபார நிலையங்கள் உள்ளிட்ட உணவு கையாளும் நிறுவனங்கள் என்பன திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
பிராந்திய சுற்றுச்சூழல், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத் தலைமையிலான, சுகாதார வைத்திய அதிகாரிகளான டொக்டர் எம்.எம்.நௌஷாத், டாக்டர் ஜே.மதன், டாக்டர் என்.ரமேஷ், டாக்டர் திருமதி ஜீவா ஆகியோருடன் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லாபீர், உணவு மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இச்சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது சுகாதார விதிமுறைகளை மீறிய உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, பழுதடைந்த உணவு பொருட்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. அத்துடன் பாவிக்க முடியாத, சேதமடைந்த உணவு தயாரிக்கும் பாத்திரங்களும் கைப்பற்றப்பட்டன.
உணவகங்களின் தரத்தை மேம்படுத்தி சுகாதாரமானது பாதுகாப்பானதுமான உணவினை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுப்பதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்






SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: