Wednesday, March 5, 2025

சாய்ந்தமருதில் நோன்புக்கஞ்சி தயாரித்து விநியோகிக்கும் பள்ளிவாசல்கள் மற்றும் உணவகங்களில் இறுக்கமான சுகாதார பரிசோதனை..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 சாய்ந்தமருதில் நோன்புக்கஞ்சி தயாரித்து விநியோகிக்கும் பள்ளிவாசல்கள் மற்றும் உணவகங்களில் இறுக்கமான சுகாதார பரிசோதனை..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட உணவகங்கள் மற்றும் நோன்புக்கஞ்சி தயாரித்து விநியோகம் செய்யும் பள்ளிவாசல்கள் முதலானவை இன்று (04) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஜே.எம். நிஸ்தார், ஏ.எல்.எம். அஸ்லம், ஏ. வாசித் அஹமட் மற்றும் டெங்கு களத்தடுப்பு பணியாளர்கள் முதலானோர் கலந்து கொண்டனர்.
இதன்போது உணவகங்களில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவைக் கையாண்ட இரண்டு உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவ் உணவுப் பண்டங்கள் உணவக உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள் உணவு கையாளும் நிறுவனங்களில் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை உடனடியாக அறிவிப்பதற்கு QR ஸ்டிக்கரும் உணவகங்களில் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்




SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: