இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை வலய கல்விப் பிரதி பணிப்பாளர் MHA.ஜாபிர் அவர்கள் கலந்து கொண்டதுடன்.சிறப்பு விருந்தினராக AHM.அன்சார் ISA மற்றும் VT.தையூப் ISA, KM/Ganesha Vidyalaya அதிபர் P.கமலேநாதன், KM/Lafir Vidyalaya அதிபர் CM.நஜீப் மற்றும் KM/Islamabad Vidyalaya அதிபர் AGM.ரிசாட், KM/Sivasakthi Vidyalaya அதிபர் S.தனராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், சமூக சேவை அமைப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் பிரதம அதிதி, பாடசாலை அதிபர், அதிதிகளினால் தேசிய கொடி, பாடசாலை கொடி, இல்லவிளையாட்டுற்கானா கொடி மற்றும் இல்லங்களுக்கான கொடி இல்லங்களுக்கான பொறுப்பு ஆசிரியர்களால் ஏற்றிவைக்கப்பட்டதுடன் அதனை தொடர்ந்து பிரதம அதிதி உரையாற்றி இந் நிகழ்வை ஆரம்பம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் இல்லங்களுக்கு இடையிலான அணிநடை பவனி, போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கமும் சான்றிதழ்களும் மற்றும் வெற்றி பெற்ற இல்லத்திற்கு வெற்றி கோப்பை வழங்கி வைப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன்.
மேலும் இந் நிகழ்வில் ஒரு அங்கமாக கமு/அல்-அக்ஷா வித்தியாலயத்தில் 2023(2024) ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சையில் 8A1B பெற்று சித்தியடைந்த ML.நாசீகா எனும் மாணவியை கௌரவிக்கும் விதமாக MHK Marketing Pvt நிர்வாக இயக்குனர் M.மாஜித் அவர்களால் ரூபா.15,000 பெறுமதியான காசோலை வழங்கி வைக்கப்பட்டது இதன் போது பாடசாலையின் அதிபரும் கலந்து கொண்டார்.






















0 comments: