🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 சாய்ந்தமருது அல்-கமரூன் வித்தியாலயத்தில் ‘Kamaroon Shines’ பாராட்டு விழாவும் ஸ்மார்ட் போர்ட் அன்பளிப்பு நிகழ்வும்…!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………………
✅👉 சாய்ந்தமருது கமு/கமு/அல்-கமரூன் வித்தியாலயத்தில் தரம் ஐந்து மாணவர்களின் திறமைகள் மற்றும் சாதனைகளைப் பாராட்டும் வகையில் ‘Kamaroon Shines’ பாராட்டு விழாவும், ஸ்மார்ட் போர்ட் அன்பளிப்பு நிகழ்வும் இன்று (12) பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் திருமதி எம்.எச். நுஸ்ரத் பேகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் பிரதி மேயரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபக தலைவருமான எம். ரஹ்மத் மன்சூர் கலந்து சிறப்பித்தார்.
மேலும், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி அஸ்மா அப்துல் மலிக் விசேட அதிதியாகவும், கல்முனை ஆசிரிய ஆலோசகரும் EPSI இணைப்பாளருமான எம்.எம். சியாம் மற்றும் ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.எம்.எம். அன்சார் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கல்வி, இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் மற்றும் பல்வேறு துறைகளிலான திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், புலமைப்பரிசில் பரிட்சையில் சாதனை படைத்த மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கற்றல்–கற்பித்தல் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் ஸ்மார்ட் போர்டும் ரஹ்மத் பவுண்டேஷனினால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.
மாணவர்களின் எதிர்காலக் கல்வி வளர்ச்சிக்கும், பாடசாலையின் கல்வித் தர மேம்பாட்டுக்கும் இத்தகைய முயற்சிகள் பெரும் பங்களிப்புச் செய்யும் என நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது. பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்





0 comments: