Sunday, November 15, 2026

வாங்காமம் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ஜனாஸா கூடாரம் மற்றும் ஜனாஸா குளிப்பாட்டும் தட்டு அன்பளிப்பு…!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 வாங்காமம் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ஜனாஸா கூடாரம் மற்றும் ஜனாஸா குளிப்பாட்டும் தட்டு அன்பளிப்பு…!


✅👉 கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் மற்றுமொரு உயரிய மனிதநேயப் பணி…!


✍️ எம்.சி.எம்.ஷம்சுல் முனா


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………………..


✅👉 மக்களின் அத்தியாவசியத் தேவைகளை அறிந்து, மனிதநேயத்தையும் சமூகப் பொறுப்புணர்வையும் அடிப்படையாகக் கொண்டு பல்வேறு சமூகநலப் பணிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன், மற்றுமொரு உன்னதமான சேவையாக வாங்காமம் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ஜனாஸா கூடாரம் மற்றும் ஜனாஸா குளிப்பாட்டுவதற்கான தட்டு ஆகியவற்றை இன்று (13) அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளது.


வாங்காமம் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினர் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க, கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதிப் மேயரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களினால் இவ்வுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.


மரணித்தவர்களின் இறுதிக் கடமைகளை இஸ்லாமிய முறைப்படி கண்ணியத்துடனும் உரிய ஒழுங்குடனும் நிறைவேற்றுவதற்கு ஜனாஸா கூடாரமும், ஜனாஸா குளிப்பாட்டும் தட்டும் மிகவும் அவசியமான உபகரணங்களாகும். அந்த வகையில், வாங்காமம் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலின் ஜனாஸா நற்பணிக் குழுவினரின் சேவைகளை இலகுபடுத்தும் நோக்கில் இவ்வுபகரணங்கள் வழங்கப்பட்டிருப்பது மிகவும் அர்த்தமுள்ள சமூகப் பணியாக அமைந்துள்ளது.


இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் மதிப்பிற்குரிய எம். எல்.முஸ்மி அவர்கள் விஷேட அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், வாங்காமம் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினர், ஊர் முக்கியஸ்தர்கள், உலமாக்கள், சமூக நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


மனிதநேயம் என்பது வாழ்வோருக்கு உதவுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை; மரணித்தவர்களின் இறுதிப் பயணத்தையும் கண்ணியமாக்குவதற்கு துணைநிற்பதிலும் அதன் உயரிய அர்த்தம் வெளிப்படுகிறது.


அந்த வகையில், வாங்காமம் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலின் தேவையை உணர்ந்து, இவ்வாறான அத்தியாவசிய உபகரணங்களை வழங்க முன்வந்த ரஹ்மத் மன்சூர் அவர்களினதும் ரஹ்மத் பவுண்டேஷனினதும் இப்பணி, சமூகத்தின் மத்தியில் பாராட்டப்பட வேண்டிய உயரிய மனிதநேயச் சேவையாகும்.


மக்களின் தேவைகளை அறிந்து, மதம், இனம், பிரதேசம் என்ற எல்லைகளைக் கடந்து சமூக நலனுக்காகத் தொடர்ச்சியாகப் பணியாற்றும் ரஹ்மத் பவுண்டேஷனின் சேவைகளில் இது மற்றுமொரு சிறப்புமிக்க மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்















SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: