Sunday, November 1, 2026

தேசிய அளவில் பேசப்பட்ட பிரமாண்டமான பெருவிழா: ஹிஸ்புல்லாஹ்வின் காலத்தால் அழியாத சேவையும், தடம் பதித்த வரலாறும்…!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰


✅👉 தேசிய அளவில் பேசப்பட்ட பிரமாண்டமான பெருவிழா: ஹிஸ்புல்லாஹ்வின் காலத்தால் அழியாத சேவையும், தடம் பதித்த வரலாறும்…!


✍️ எஸ். சினீஸ் கான்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………………….


✅👉 காலங்கள் கடந்தாலும், உண்மையான தலைவர்களின் மக்கள் சேவை காலத்தால் அழியாமல் வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்பதற்கு இது ஒரு வரலாற்றுச் சான்று.


இன்றிலிருந்து மூன்று தசாப்தங்களுக்கு முன்பு, அதாவது 1995 அக்டோபர் 14 அன்று 'வீரகேசரி' நாளிதழில் வெளிவந்த வரலாற்றுச் செய்தி இது.


1990களில் ஏற்பட்ட பேரிடர்களால் கடுமையாகச் சேதமடைந்து, கல்விச் செயற்பாடுகள் ஸ்தம்பித்துப் போயிருந்த ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரியின் மீள் எழுச்சிக்காக, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தனது தொலைநோக்குச் சிந்தனையால் முன்னெடுத்த மகத்தான சாதனை.


சுமார் 50 இலட்சம் ரூபாய் செலவில் (அக்காலகட்டத்தின் மிகப்பெரிய நிதிப் பெறுமதி), வட-கிழக்கு மாகாணத்திலேயே மிக நீளமான மூன்று மாடிகளைக் கொண்ட பிரம்மாண்டமான கட்டடத் தொகுதியாகவும், சுமார் 25 வகுப்பறைகள் மற்றும் நவீன ஆய்வூட வசதிகளுடனும் இக் கல்விக்கூடம் உருவாக்கப்பட்டது.


அக்காலத்தில் தேசிய அளவில் பெரும் பேசுபொருளாகவும், வியந்து பாராட்டப்பட்ட ஒரு முன்மாதிரி அபிவிருத்தித் திட்டமாகவும் இது திகழ்ந்தது. 


அன்றைக்கு விதைக்கப்பட்ட அந்த அறிவு விதை, இன்று எத்தனையோ தலைமுறைகளை உருவாக்கிக் கம்பீரமாக நிற்கிறது என்றால், அதன் பின்னணியில் நமது ஹிஸ்புல்லா அவர்களின் அயராத உழைப்பும், கல்வி மீது அவர் கொண்டிருந்த எல்லையற்ற பற்றுதலுமே மூலதனமாகும்.

அன்றும் - இன்றும் - என்றும் சமூகத்தின் கல்வி மேம்பாட்டிற்காகவே தனது வாழ் நாளை அர்ப்பணித்து வரும் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் அழியாத சேவையை இந்த நல்ல வேளையில் பெருமையுடன் நினைவுபூர்வமாகப் பதிவிடுகிறோம்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: