📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 மக்களின் அடிப்படைத் தேவைக்கு முன்னுரிமை – கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் குழாய்கிணறு ரஹ்மத் பவூண்டேசனினால் வழங்கி வைப்பு…!
✍️ எம்.சி.எம்.ஷம்சுல் முனா
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………….
✅👉 கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் அனுசரனையில் நிர்மாணிக்கப்பட்ட குழாய்கிணறு பொதுமக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
அதிகரித்து வரும் நீர்க்கட்டணங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, அவர்களின் அத்தியாவசிய நீர்த் தேவைக்குத் தீர்வளிக்கும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகரும் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் வழிகாட்டுதலில், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் அனுசரனையில் இக்குழாய்க்கிணறு நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.
மக்களின் அடிப்படைத் தேவைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்குச் சாத்தியமான தீர்வுகளை வழங்கும் நோக்கில் ரஹ்மத் பவுண்டேசன் தொடர்ச்சியாகப் பல்வேறு சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
மனிதநேயம், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இத்தகைய திட்டங்கள், அத்தியாவசியத் தேவைகளால் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவுவதுடன், சமூக நலன்சார் பணிகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்





0 comments: