Sunday, November 8, 2026

மாபெரும் வேலைவாய்ப்புச் சரித்திரம்: இளம் தலைமுறையினர் அறிய வேண்டிய ஹிஸ்புல்லாஹ்வின் சாதனைப் பக்கம்…!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 மாபெரும் வேலைவாய்ப்புச் சரித்திரம்: இளம் தலைமுறையினர் அறிய வேண்டிய ஹிஸ்புல்லாஹ்வின் சாதனைப் பக்கம்…!


✍️ எஸ். சினீஸ் கான்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………………


✅👉 ஒரு சமூகத்தின் எழுச்சிக்கும் அதன் எதிர்கால சந்ததியினரின் பொருளாதாரப் பாதுகாப்புக்கும் முறையான வேலைவாய்ப்புகளும் தகுந்த வழிகாட்டல்களுமே வலுவான அடித்தளமாக அமைகின்றன. அரசியல் அதிகாரத்தை வெறும் அந்தஸ்துக்காகப் பயன்படுத்தாமல், அதனை ஒடுக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் கருவியாக மாற்றுவதே உண்மையான மக்கள் சேவை என்பதற்கு வரலாற்றில் சில ஆளுமைகளின் உழைப்பு சாட்சியாக விளங்குகின்றது. 


அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்திற்கு ஒளிசேர்க்கவும் அன்றைய காலக்கட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்புமிக்க வேலைவாய்ப்புத் திட்டங்கள் என்றும் பாராட்டத்தக்கவை.


சுமார் 30 வருடங்களுக்கு முன்னர், மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நலனுக்காக அன்றைய பிரதி அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் மேற்கொண்ட மகத்தான மக்கள் பணியை இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அக்காலகட்டத்தில் நிலவிய கடுமையான பொருளாதாரச் சூழலையும் வேலையின்மைப் பிரச்சினையையும் கருத்திற்கொண்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் 1014 பேருக்கு சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக முறையான வேலைவாய்ப்பு நியமனங்கள் வழங்கப்பட்டன. 


இத்தகைய மாபெரும் வேலைவாய்ப்புத் திட்டத்தைவழங்குவது என்பது சாதாரண காரியமன்று. கடின முயற்சிக்கமைய மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்கு இந்த நியமனங்களை அவர் பெற்றுக்கொடுத்தார்.


சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சாதனைமிக்க சேவையானது, மக்கள் சேவையைத் தன் மூச்சாகக் கொண்ட ஒரு தலைவனின் தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துகிறது. அன்றைய காலகட்டத்தில் முறையான தொழில் வாய்ப்புகளின்றித் தவித்த நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் இதன் மூலம் ஸ்திரப்படுத்தப்பட்டது.


குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் சகோதரர்களும் இதில் பெரும்பாண்மையாக உள்வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: