Sunday, November 8, 2026

அல்-அர்சத் பாடசாலையின் வளர்ச்சியில் தடம் பதித்த அதிபர் – 'தடயம்' நினைவு இதழுடன் பிரியாவிடை…!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 அல்-அர்சத் பாடசாலையின் வளர்ச்சியில் தடம் பதித்த அதிபர் – 'தடயம்' நினைவு இதழுடன் பிரியாவிடை…!


✍️ மின்மினி மின்ஹா


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………………………….


✅👉 கல்வி என்பது மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் பணியாகும். அந்தப் பணியில் அதிபர் ஒருவரின் அர்ப்பணிப்பும் நிர்வாகத் திறனும் பாடசாலையின் முன்னேற்றத்தில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அந்த வகையில், சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயத்தின் கல்வி மற்றும் பௌதிக வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்புச் செய்த அதிபர் எம். அப்துல் ரஹீம் (SLPS-I) அவர்களின் அரச சேவை ஓய்வையொட்டி பிரியாவிடை விழா நேற்று (05) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பாடசாலையின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.


அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட கமு/சது/அல்-அர்சத் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDEC), பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PPA) மற்றும் பெற்றோர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.


பாடசாலையின் பிரதி அதிபர் இசட். மொஹமட் ஸவாஹிர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி நிர்வாகம் மற்றும் பொது முகாமைத்துவப் பிரதி கல்விப் பணிப்பாளர் ஏ.சி. நுஸ்ரத் நிலோபரா, திட்டமிடல் பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எம். சித்தி பாத்திமா, கல்வி நிர்வாகப் பிரதி கல்விப் பணிப்பாளர் எச். நைறூஸ்கான், இறக்காமம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ். சஹீத், பிரதி கல்விப் பணிப்பாளர் ஏ.எம். மொஹமட் சியாத், சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளரும் EPSI இணைப்பாளருமான எம்.டி.எம். ஜானோபர், வலயக் கல்வி அலுவலகக் கணக்காளர் எம்.பி.எம். இத்ரீஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.


அத்துடன், பாடசாலையின் உதவி அதிபர்களான திருமதி மஜீதா தாஸீம், எம்.எம். மொஹமட் ஜெஸீல், சம்மாந்துறை பிரதம நம்பிக்கையாளர் மஜீத் (சத்தார்), மஜ்லிஸ் அஷ்ஷூரா சபையின் தலைவர் ஐ. அப்துல் ஜப்பார், சம்மாந்துறை கோட்டத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள், ஓய்வுபெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.


அதிபரின் சேவைகளைப் பாராட்டும் வகையில் பாடசாலைச் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் பிரதான விழாவுக்கு முன்னதாகவே தனித்தனியான பாராட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர். கடந்த திங்கட்கிழமை (02) ஆரம்பப் பிரிவு மாணவர்களின் பெற்றோர்களும், செவ்வாய்க்கிழமை (03) இடைநிலைப் பிரிவு மாணவர்களின் சார்பிலும் பாராட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து புதன்கிழமை (04) பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் இணைந்து அதிபருக்கான பாராட்டு நிகழ்வை ஏற்பாடு செய்து கௌரவங்களை வழங்கினர்.


இன்றைய பிரியாவிடை நிகழ்வில் அதிபர் எம். அப்துல் ரஹீம் பாடசாலையின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும் பௌதிக வளங்களை விருத்தி செய்வதற்கும் ஆற்றிய பணிகள் பாராட்டப்பட்டதுடன், அவரது நீண்டகாலக் கல்விச் சேவையைப் பாடசாலைச் சமூகம் நன்றியுடன் நினைவுகூர்ந்தது.


இதன்போது ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினர் பொன்னாடை போர்த்தியும், நினைவுப் பரிசுகள் வழங்கியும் அவரைக் கௌரவித்தனர்.


அதிபரின் பணிக்காலம், கல்விப் பயணம், பாடசாலைக்காக ஆற்றிய சேவைகள் மற்றும் நினைவுகளை எதிர்காலச் சந்ததியினரும் அறிந்துகொள்ளும் வகையில் பாடசாலை ஆசிரியர்களின் பூரண ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட 'தடயம்' எனும் சிறப்பு நினைவு இதழ் இந்நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நினைவு இதழ் வெளியீடு விழாவின் முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது.


கல்வி நிர்வாகப் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்றாலும், பாடசாலையின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய சேவைகளும் கல்விச் சமூகத்துடன் ஏற்படுத்திய உறவுகளும் என்றும் நினைவுகூரப்படும் எனத் தெரிவிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.


அதிபரின் நீண்டகால அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டிய பாடசாலைச் சமூகம், அவருக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து பிரியாவிடை வழங்கியது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்





















SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: