Sunday, November 15, 2026

கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை ;சிரேஸ்ட சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் சமீம் தலைமையில் சத்திரசிகிச்சை வெற்றி…!

Ad 728x90


 🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை ;சிரேஸ்ட சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் சமீம் தலைமையில் சத்திரசிகிச்சை வெற்றி…!


✍️ எம்.என்.எம்.அப்ராஸ் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………………………..


✅👉 கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாக, 70 வயதுடைய பெண் ஒருவருக்கு மிகச் சிக்கலான வயிற்றுச் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக கடந்த செவ்வாய்கிழமை (10) இடம் பெற்றது.


நீண்ட காலமாக உணவு உட்கொள்ள முடியாமல் கடுமையான சிரமங்களை எதிர்நோக்கி வந்த நோயாளிக்கு மேற்கொள்ளப்பட்ட மேல் இரைப்பை எண்டோஸ்கொப்பி (Upper Gastrointestinal Endoscopy) பரிசோதனையின் மூலம் வயிற்றில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இக்கட்டியானது வயிற்றிலிருந்து உணவு சிறுகுடலுக்குச் செல்லும் பாதையை அடைத்து, இரைப்பை வெளியீட்டுத் தடையை (Gastric Outlet Obstruction) ஏற்படுத்தியிருந்தது.


இதனைக் கருத்திற்கொண்டு, போர்ட் சான்றிதழ் பெற்ற சிரேஸ்ட சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ. டபிள்யூ. எம். சமீம் அவர்களின் தலைமையில், நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த sub total Gastrectomy with gastrojejunostomy (முழு வயிற்றை அகற்றி, உணவுக்குழாயை சிறுகுடலுடன் இணைக்கும்) சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.


பொதுச் சத்திரசிகிச்சை, மேம்பட்ட சத்திரசிகிச்சை முறைகள் மற்றும் நவீன லேப்ராஸ்கோப்பிக் சத்திரசிகிச்சைகளில் ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட நீண்ட அனுபவம் கொண்ட டாக்டர் சமீம் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் வைத்தியசாலைக் குழுவினரின் ஒத்துழைப்புடன் நோயாளி தற்போது பூரண குணமடைந்து ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார்.


மேலும் இதன் போது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எல். எம்.றிபாஸ் நோயாளியைப்  

நேரில் சென்று பார்வையிட்டதுடன் தண்ணீரும் கொடுத்தார்.


உயர்தர சத்திரசிகிச்சைகள் அரச வைத்தியசாலையிலேயே இலவசமாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பது அம்பாரை மாவட்ட மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வரப்பிரசாதமாகும்.


பொது மக்களுக்கு நவீன மற்றும் உயர்தர சத்திரசிகிச்சைகளை அரச வைத்தியசாலைகளிலேயே பெற்றுக்கொள்ள முடியும் என்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அமைந்துள்ளது.


இச்சாதனையில் பங்களித்த அனைத்து மருத்துவர்கள், மயக்க மருந்து வைத்திய நிபுணர்கள், தாதியர்கள் மற்றும் சத்திரசிகிச்சைக் குழுவினருக்குப் பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: