📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 கல்முனை இஸ்லாமாபாத் ஜனாஸா நலன்புரி அமைப்பினர் ரஹ்மத் மன்சூர் அவர்களுடன் சந்திப்பு…!
✍️ எம்.சி.எம்.ஷம்சுல் முனா
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………..
✅👉 கல்முனை இஸ்லாமாபாத் அக்கறைக் குழு ஜனாஸா நலன்புரி அமைப்பின் பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களை (15) சந்தித்துக் கலந்துரையாடினர்.
கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட உறுப்பினர்களும், ரஹ்மத் பவுண்டேஷனின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஜனாஸா நலன்புரி அமைப்பின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் சமூக நலன்புரிச் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்












0 comments: