🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 மாணவர்களுக்கான நிழற்குடை மற்றும் குப்பை சேகரிப்பு இடம் திறந்து வைப்பு…!
✍️ School Media Unit
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………….
✅👉 கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலய மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, மாணவர்களுக்கான நிழற்குடை மற்றும் குப்பைகளைச் சேகரிப்பதற்கான பிரத்தியேக இடம் என்பன பாடசாலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிழற்குடை மற்றும் குப்பை சேகரிப்பு இடம் ஆகியவற்றைப் பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிஷாத் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
மாணவர்கள் ஓய்வெடுப்பதற்கும், வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கும் நிழற்குடை உதவியாக அமையும். அதேவேளை, குப்பைகளை உரிய இடங்களில் சேகரிப்பதற்கான பிரத்தியேக இடம் அமைக்கப்பட்டுள்ளமையானது, பாடசாலைச் சூழலைத் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பேணுவதற்கு வழிவகுக்கும்.
இத்தகைய வசதிகள் மாணவர்களின் நலனை மேம்படுத்துவதுடன், அவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மை தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்






0 comments: