Thursday, October 15, 2026

அல் பயான் பழைய மாணவர்களின் நான்காவது ஒன்றுகூடல் தர்கா நகரில் சிறப்பாக நிறைவு…!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 அல் பயான் பழைய மாணவர்களின் நான்காவது ஒன்றுகூடல் தர்கா நகரில் சிறப்பாக நிறைவு…!


✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………………………


✅👉 அல் பயான் அரபுக் கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான நான்காவது ஒன்றுகூடல் அல் பயான் பழைய மாணவர் நலன்புரிச் சங்கத்தின் களுத்துறை மாவட்ட அல் -பயானின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில், 2026 ஒக்டோபர் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் தர்கா நகரில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 55 இற்கும் மேற்பட்ட பழைய மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.


ஒன்றுகூடலின் சிறப்பம்சமாக, பழைய மாணவர்களுக்கான விசேட T-shirt அறிமுகப்படுத்தப்பட்டு, நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.


சனிக்கிழமை காலையில் நடைபெற்ற நிர்வாகக் கலந்துரையாடலில், சங்கத்தின் கடந்தகாலச் செயற்பாடுகள், முன்னெடுக்கப்பட்ட நலன்புரித் திட்டங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், மாணவர்களின் கருத்துகளும் பெறப்பட்டன.


இதன்போது, பழைய மாணவர் சகோதரர் சம்ஸுல் முனா அவர்களால் சங்கத் தலைவர் அல்- ஹாபிழ் றிம்ஸான் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.


மேலும், அல் பயான் பழைய மாணவர்களின் ஐந்தாவது ஒன்றுகூடல் நிகழ்வு கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.


நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் சார்பில் சகோதரர் பஸ்லுல்லாஹ் அவர்களும், ஏற்பாட்டுக் குழு சார்பில் சகோதரர் இஷ்ரத் அவர்களும், நிர்வாக சபை சார்பில் சகோதரர் அமீர் அவர்களும் நன்றியுரைகளை வழங்கினர்.


பழைய மாணவர்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் வகையில் அமைந்த இவ்வொன்றுகூடல் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்





















SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: