Saturday, October 3, 2026

பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் 2026 நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி பாடசாலைகளுக்கு அத்தியாவசிய வசதிகள்..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் 2026 நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி பாடசாலைகளுக்கு அத்தியாவசிய வசதிகள்..!


✍️ எஸ். சினீஸ் கான்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………….


✅👉 மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் - 2026 நிதி ஒதுக்கீட்டின் கீழ், காத்தான்குடியில் உள்ள பாடசாலைகள் மற்றும் சமூக நிறுவனங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ரூபா 10 இலட்சம் பெறுமதியான பல்வேறு பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


குறித்த பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு புதன்கிழமை (30) காத்தான்குடி பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் தலைமையில் நடைபெற்றது.


மெத்தைப் பள்ளி வித்தியாலயம், கரீப் நவாஸ் பவுன்டேஷன், பாத்திமா பாலிகா வித்தியாலயம், அன்வர் வித்தியாலயம் மற்றும் தாருஸ்ஸலாம் வித்தியாலயம் ஆகியவற்றின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக குறித்த நிதி ஒதுக்கீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


இவ்வாறு வழங்கப்பட்ட வசதிகள் மூலம் மாணவர்களின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கல்வித்துறைக்கு முன்னுரிமை வழங்கி, பிரதேசத்தின் பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றை நிறைவேற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இந்நிகழ்வில் நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எஸ்.எம். சில்மியா, திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் ஹன்சுல் சிஹானா, நகர சபை உறுப்பினர்களான சட்டமாணி ஈ.எம். றுஸ்வின், சல்மா அமீர் ஹம்ஸா, பொறியியலாளர் ரியாஜ் முகமட் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


-- ஊடகப்பிரிவு


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்





SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: