🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்வி ஊக்குவிப்பு: உயர் சித்தி பெற்ற மாணவிக்கு ரூ.15,000 காசோலை வழங்கி வைப்பு…!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………………..
✅👉 சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, கமு/கமு/அல்-அக்ஷா மத்திய மகா வித்தியாலயத்தில் கபொத சாதாரண தரப் பரீட்சையில் உயர் சித்தி பெற்ற மாணவி அலியார் பாத்திமா அப்தா அவர்களுக்கு ரூ.15,000 பெறுமதியான காசோலை இன்று (01) காலை உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
எம்.எச்.கே. மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் (MHK Marketing Pvt Ltd) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் சமூக சேவையாளருமான மஹ்முத் மாஜித் அவர்களினால், ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக ஐந்தாவது முறையாக இந்நிதியுதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிப்பதையும், உயர்கல்வியை தொடர்வதற்கான வாழ்வாதார ஆதரவை வழங்குவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வரும் சமூகநலப் திட்டத்தின் தொடர்ச்சியாகவே இக்காசோலை வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்











0 comments: