Monday, September 7, 2026

பிஜி நாட்டின் சட்ட மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் இலங்கை நாட்டை சேர்ந்த நீதிபதி அஷ்ஷேய்க் யூ. எல். அஸ்ஹர் (நளீமி) நியமனம்…!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰


✅👉 பிஜி நாட்டின் சட்ட மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் இலங்கை நாட்டை சேர்ந்த நீதிபதி அஷ்ஷேய்க் யூ. எல். அஸ்ஹர் (நளீமி) நியமனம்…!


✍️ ஏ.எச்.றகீப் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………………………


✅👉 பிஜி நாட்டில் சட்ட மறுசீரமைப்பு செய்து புதிய சட்ட வரைபை கொண்டுவரும் நோக்கில் அந்நாட்டு அரசாங்கம் 03 நிபுணத்துவம் பெற்ற 03 நீதிபதிகளை உள்ளடக்கிய சட்ட மறுசீரமைப்பு ஆணைக்குழு ஒன்றினை நிறுவி உள்ளது. 


குறித்த 03 நீதிபதிகளைக் கொண்ட

ஆணைக்குழுவில் ஒருவராக இலங்கையைச் சேர்ந்த நீதிபதி அஷ்ஷேய்க் யூ. எல். அஸ்ஹர் (நளீமி) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது இலங்கை நீதித்துறைக்கும் நாட்டுக்கும் கிடைத்த மிகப் பெரும் கௌரவமாகும். 


மேலும் இவ் ஆணைக்குழுவில் பஜி நாட்டின் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அலிபேட் கெடாகி மற்றும் நீதிபதி செனிலேபா லெவாசி ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர். 


நீதிபதி அஷ்ஷேய்க் யூ. எல். அஸ்ஹர் (நளீமி) அவர்கள், அம்பாரை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் இலங்கையில் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் மற்றும் திருகோணமலை மூதூர் மாவட்ட நீதிமன்றம் ஆகியவற்றில் கடமையாற்றிவர் ஆவார்.


நீதித்துறையின் மீது அரசியல் அழுத்தம் உச்சம் நிறைந்த காலப்பகுதியில் நேர்மையான நீதிபதியாக இவர் கடமையாற்றிவர் ஆவார். தற்போது அவர், பிஜி நாட்டின் உயர் நீதிமன்ற நீதியரசராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்






SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: