Monday, September 7, 2026

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் சிறப்பான சாதனை…!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் சிறப்பான சாதனை…!


✍️ யு.எல். அலி. ஜமாயில்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………………


✅👉கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயம் இவ்வருடம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 94.12 சதவீத வெற்றியைப் பெற்றுக் கொண்டு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. 


அப் பாடசாலையிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய 17 மாணவர்களில்,16 பேர் சித்தியடைந்ததோடு இருவர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.


பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். ரிஷாத் தலைமையில் இன்று 2026.09.07 நடைபெற்ற காலை ஆராதனையில்,  பிரதி அதிபர் எம்.ரீ.ஏ. முனாப், ஆரம்பப் பிரிவு பகுதித்தலைவர் ரீ. வில்வராஜா, வகுப்பாசிரியர் ஏ. ஷாஹிலா ஆகியோரின் பங்கேற்புடனும் பரீட்சைக்குத் தோற்றிய  மாணவர்களுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். 


அதிபர் தனதுரையின் போது, இச் சாதனைக்கு வித்திட்ட ஆசிரியர்கள், பகுதித்தலைவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்து, எதிர்காலத்திலும் மாணவர்கள் அர்ப்பணிப்புடனும் விடாமுயற்சியுடனும் செயற்பட்டு வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளுமாறு ஆலோசனைகளை வழங்கினார்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ  எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்










SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: