Monday, September 7, 2026

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கௌரவிப்பு…!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கௌரவிப்பு…!


✍️ நௌஷாத் அனாப் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………..


✅👉 நற்பிட்டிமுனை கமு/கமு/அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த ஐந்து மாணவர்களுக்கு பணப்பரிசும், பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (07.09.2026) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வை நற்பிட்டிமுனை நண்பர்கள் வட்டம் சமூக சேவை அமைப்பு ஏற்பாடு செய்திருந்ததுடன், மாணவர்களை வழிநடத்தி கற்பித்த ஆசிரியர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


நிகழ்வு பாடசாலை அதிபர் எம். எல். பதியுதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக நற்பிட்டிமுனை நண்பர்கள் வட்டம் சமூக சேவை அமைப்பின் தலைவர் எம். ஐ. நிரோஸ், ஜே.பி., செயலாளர் ஐ.எம்.ரிபான்,ஜே.பி., (ஆசிரியர்) மற்றும் பொருளாளர் ஆர். லதீப், (நற்பிட்டிமுனை கிமாஸ் மல்டி சென்டர் நிறுவனத்தின் பணிப்பாளர் )ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


மேலும், பாடசாலையின் ஆரம்பப் பிரிவு மற்றும் உயர்பிரிவு மாணவர்கள், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்



















SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: