📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 காத்தான்குடி நகரசபையின் உதவியுடன் கடற்கரைப் பள்ளிவாசல் வளாகம் சுத்திகரிப்பு…!
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………..
✅👉 கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப் நம்பிக்கையாளர் சபையின் வேண்டுகோளின் பேரில், காத்தான்குடி நகரசபையின் ஒத்துழைப்புடன் கடற்கரைப் பள்ளிவாசல் வளாகத்தைச் சுத்திகரிக்கும் பணிகள் 10.09.2026 காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடற்கரைப் பகுதிகளை விசேடமாகச் சுத்திகரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பிரத்தியேக இயந்திரத்தின் உதவியுடன், பள்ளிவாசல் வளாகத்தில் நீண்டகாலமாகத் தேங்கியிருந்த குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றி, வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்களும் பொதுமக்களும் வருகைதரும் முக்கியமான ஆன்மீகத் தளமாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஸ்தலமாகவும் திகழும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப் வளாகத்தில் இத்தகைய விரிவான மணல் சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை நீண்டகாலமாக நிலவிவந்தது.
இந்நிலையில், நம்பிக்கையாளர் சபையின் வேண்டுகோளை ஏற்று, தேவையான இயந்திர வசதிகளை வழங்கி இப்பணியை முன்னெடுக்க காத்தான்குடி நகரசபை முன்வந்தமை பாராட்டத்தக்கதாகும்.
இதற்காக காத்தான்குடி நகரசபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப் நம்பிக்கையாளர் சபை சார்பில் எமது உளமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பொதுமக்களின் ஆன்மீகப் பயன்பாட்டிற்கும், வருகைதரும் யாத்திரிகர்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்கும் ஏற்ற வகையில் இவ்வளாகத்தைத் தூய்மையாகவும், சிறப்பாகவும் பேணுவதில் தொடர்ந்தும் அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்




0 comments: