🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் (OHCHR) சிறப்புப் பயிற்சிக்குத் தெரிவான இளம் சட்டத்தரணி ஹக்கானி மஜீத் அவர்களுக்கு ரஹ்மத் மன்சூர் விடுக்கும் வாழ்த்துச் செய்தி…!
✍️ எம்.சி.எம்.ஷம்சுல் முனா
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………….
✅👉 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் (OHCHR) 'சுதேசி மக்கள் மற்றும் சிறுபான்மையினர் பிரிவு' (Indigenous Peoples and Minorities Section) ஜெனிவாவில் நடத்தும் ஒரு மாதகால சிறப்புப் பயிற்சித் திட்டத்திற்கு இலங்கையின் கிழக்கு மாகாணம், சாய்ந்தமருதைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி ஹக்கானி மஜீத் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டிருப்பது எமக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
துடிப்பும், திறமையும், சிறந்த மொழியாற்றலும் கொண்ட இளம் சட்டத்தரணியான அவர், தனது அர்ப்பணிப்பு, அறிவாற்றல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வின் மூலம் உயர்ந்த சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது பாராட்டத்தக்க சாதனையாகும்.
மேலும், அவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும் மறைந்த தலைசிறந்த அரசியல் ஆளுமையுமான மர்ஹூம் முழக்கம் அப்துல் மஜீத் அவர்களின் சிரேஷ்ட புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எமது கட்சியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக திறமையுடன் பணியாற்றி வரும் சகோதரர் ஹக்கானி மஜீத் அவர்கள், இந்தப் பயிற்சியின் மூலம் மேலும் பல அறிவு, அனுபவங்கள் மற்றும் சர்வதேச பார்வைகளைப் பெற்று, சமூகத்திற்கும் நாட்டிற்கும் சிறந்த சேவைகளை வழங்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.
சகோதரர் ஹக்கானி மஜீத் அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல தேசிய, சர்வதேச உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன்.
ரஹ்மத் மன்சூர்
முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வர்
தேசிய பொருளாளர் – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ஸ்தாபகத் தலைவர் – ரஹ்மத் பவுண்டேஷன்.
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்



0 comments: