Sunday, August 23, 2026

நன்நடத்தை_மற்றும்_சிறுவர்_பராமரிப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு…!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 நன்நடத்தை_மற்றும்_சிறுவர்_பராமரிப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு…!


✍️ ஏ.எச்.றகீப்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………………………..


✅👉 கிழக்கு மாகாண நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் அனுசரணையில் இறக்காமம் கல்விக் கோட்டத்தில் 

தெரிவுசெய்யப்பட்ட நலிவுற்ற குடும்பங்களிலுள்ள மாணவர்கள் வீட்டிலிருந்து பாடசாலையை நோக்கிக் கல்வியைத் தொடர்வதற்காக துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் வேலைத்திட்டம் நடைபெற்று வருகின்றது.


இத்திட்டத்தினூடாக இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 04 மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டிகள் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களின் தலைமையில் கடந்த 2026.08.10 ஆம் திகதி திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.


இறக்காமம் கல்விக் கோட்டத்தில் பாடசாலைகளுக்கான போக்குவரத்து வசதிகளில் சிரமங்களை எதிர்கொள்ளும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு ஆதரவளித்து, பாடசாலை இடைவிலகலைத் தவிர்த்து, அவர்களின் பாடசாலைக் கல்வி மற்றும் கற்றல் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் இவ் உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களின் வழிகாட்டலின் கீழ், உதவிப் பிரதேச செயலாளர் அய்மா நிஃமத்துல்லா அவர்களின் நெறிப்படுத்தலில் குறித்த மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு இத்துவிச்சக்கர வண்டிகள் பயனாளி மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.


இந்நிகழ்வின் மூலம் மாணவர்களின் கல்வி உரிமை மற்றும் நலனை உறுதிப்படுத்துவதற்கான சமூகப் பொறுப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பயனுள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வவானது, சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். எம். சப்றின் மற்றும் உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ. எச். றகீப் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்றது. 


மேலும் இந்நிகழ்வில், நிர்வாக உத்தியோகத்தர் ஐ. எல். எம். றஷாக் அவர்களும் கலந்துகொண்டதோடு பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவைச் சேர்ந்த சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான எம்.எச். வஹாப், எம்.ஐ. பஸீனா, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.கே. சாஜிதா, சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் பி. யசோதா அவர்களின், முன்பிள்ளைப் பருவ சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்டாட் மற்றும் மகளிர் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர் எம். ஜி. சுவர்னா ஹேமலதா உள்ளிட்டோரும் கலந்து சிறப்பித்தனர்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: