🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 மாவடிப்பள்ளி ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக எம்.ஐ.எம்.சைபுதீன் தெரிவு…!
✍️ எம்.ஆர்.எம்.மர்ஷாத்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………..
✅👉 மாவடிப்பள்ளி ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக முன்னாள் அல்/ஜலால் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.சைபுதீன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிவாசல் புதிய நம்பிக்கையாளர்
சபை தலைவர் கடந்த 36 வருடமாக மாவடிப்பள்ளி கமு/கமு/அல்- அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் அதிபராக கடமை புரிந்து அர்ப்பணிப்புடன் சிறப்பாக பணியாற்றியதுடன் இவர் சமூக பற்றும் சிந்தனையும் மிக்கவராவார்.
இவரது தெரிவு குறித்து ஜமாத்தார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன் புதிய தலைவருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இன்று கூடிய மாவடிப்பள்ளி ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக எம்.ஐ.எம்.சைபுதீன் தலைவராகவும் ஏனைய 12 பேரும் நிர்வாக சபை உறுப்பினர்களாகவும் அவர்களை ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நமது ஒற்றுமையே நமது பலம்; பள்ளிவாசல்களின் முன்னேற்றத்திற்கு சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்" எனத் தெரிவித்த அவர், மாவடிப்பள்ளியில் வசிக்கும் வசதியுள்ள தனவந்தர்களும் அல்லாஹ்வின் இல்லங்களின் அபிவிருத்திக்காக தாராளமாக பங்களிக்க வேண்டுமென அழைப்பு விடுத்தார்.
அத்துடன், இப்பள்ளிவாசலின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் சேவையாற்றியவர்களின் அர்ப்பணிப்புகளையும்
அவர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்



0 comments: