Monday, August 17, 2026

மைமூனா மகளிர் கலாபீடத்திற்கான இணையத்தளத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தலும், கௌரவிப்பு நிகழ்வும்…!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 மைமூனா மகளிர் கலாபீடத்திற்கான இணையத்தளத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தலும், கௌரவிப்பு நிகழ்வும்…!


✍️ எம். என். எம். அப்ராஸ், நூருல் ஹுதா உமர்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………..


✅👉 கல்முனை மைமூனா சமூக அபிவிருத்தி அமையத்தின் ஏற்பாட்டில் மைமூனா மகளிர் கலாபீடத்திற்கான இணையத்தளத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தலும், கௌரவிப்பு நிகழ்வும் அமையத்தின் தலைவர் மூத்த மனநல ஆலோசகர் என்.எம்.நௌஸாத் தலைமையில் கமு/கமு/ அல் பஹ்ரியா மகா வித்தியாலத்தின் பி.எம்.முஹைதீன் மண்டபத்தில் நேற்று (16) நடைபெற்றது.


மைமூனா மகளிர் அரபுக் கலாபீடத்திற்கான இணையத்தளமான kmlac.com யினை மெடிலேன்ட் வைத்திய சாலையின் பணிப்பாளரும் மைமூனா மகளிர் அரபுக் கலாபீடத்தின் ஆலோசகருமான வைத்தியர் எஸ். எம். ஏ.அஸீஸ் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இதன் போது கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக சிறப்பான சேவையினை வழங்கி தற்போது கிழக்கு மாகாண சபையின் உள்ளுராட்சி சபைகளின் ஆணையாளராக பதவி உயர்வு பெற்றுச் சென்ற ஏ. டி. எம். ராபி அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.


மேலும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர் எம்.நௌசாட் அபூபக்கர் அவர்கள் வரவேற்கப்பட் டு கௌரவிக்கப்பட்டார்.


அத்துடன் சர்வதேச தர MRICS தரத்தில் சித்தியடைத்திருக்கும் ஏ. எல்.பஸ்மின் அவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.


இந்திகழ்வில் கலாபீடத்தின் அதிபர் மௌலவி ஏ. எல்.நாசர்,கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளி நாகூர் ஆண்டகை தர்ஹாவின் தலைவர் எம். எல்.அப்துல் அஸீஸ், அதன் செயலாளர் எம்.எச்.எம்.முபாரிஸ்,

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்முனை கிளை தலைவர் ஏ.எல்.எம்.முர்ஷித்,மைமூனா மகளிர் அரபுக் கலாபீடத்தின் ஆலோசனை சபை உறுப்பினர்களான சிரேஷ்ட விரிவுரையாளர் 

எஸ்.எல்.எம்.அப்துல் ஹலீம்,பொறியியலாளர் எம். எம்.றிஸ்கான்,இப்றா அரிசி ஆலையின் உரிமையாளர் எஸ்.எல்.எம்.நயீர்,முன்னால் பலநோக்கு கூட்டறவு சங்கத்தின் தலைவர் ஏ.எம். ஹனிபா மற்றும் கமு/ அல்பஹ்ரியா மகா வித்தியாலய அதிபர் எம்.எஸ். எம்.பைசால்,கமு/கமு /அஷ் ஷுஹறா வித்தியாலயதின் அதிபர் எம். ஏச். எஸ். ஆர்.மஜீதியா ,மேலும் அஹ்லுஸ் சுன்னத்துவல் ஜமாஆத் உலமா சபை, ஜம்மியத்துல் உலமா சபை, பதுரியா ஜும்ஆ பள்ளிவாசல், இஸ்லாமபாத் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல், ஹாமி ஜும்ஆ பள்ளிவாசல், கிரீன்பீல்ட் முஹ்யித்தீன் மஸ்ஜித், கல்முனை மாநகர பொதுச்சந்தை வர்த்தக சங்கம், கல்முனை சமூக மேம்பாட்டு மன்றம், கல்முனையான்ஸ் போரம், இராக் நட்புறவு ஒன்றியம், அஸ்டோ அமையம், அஹ்லுஸ் சுன்னத்துவல் ஜமாஆத் பேரவை ஆகியவற்றின் தலைவர் நிருவாகிகள், திறந்த பல்கலைக்கழக மற்றும் சட்டக்கல்லூரி நண்பர்கள் வட்டம் , மைமூனியா ஆலிமாக்கள், பெற்றோர்கள் , மாணவிகள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

























SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: