🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 சிறப்பாக நடைபெற்ற சமுர்த்தி கெகுலு சிறுவர் கழக கலாசாரப் போட்டி – 2026…!
✍️ ஏ.எச்.றகீப்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………….
✅👉 இறக்காமம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் சமுர்த்தி கெகுலு சிறுவர் கழக கலாசாரப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.
இறக்காமம் பிரதேசத்தில் உள்ள சிறுவர்களின் கலை, கலாசார மற்றும் படைப்பாற்றல் திறன்களை வெளிக்கொணரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட சமுர்த்தி கெகுலு சிறுவர் கழக கலாசாரப் போட்டி – 2026 நிகழ்வு 2026.08.15ஆம் திகதி சனிக்கிழமை சது மதீனா வித்தியாலயம், இறக்காமம் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பிரதேச செயலாளர் அஷ்ஷேய்க் எம். எஸ். எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் கீழ் இறக்காமம் சமுர்த்தி அபிவிருத்தி பிரிவின் முகாமைத்துவ பணிப்பாளரும் அம்பாரை மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி காரியாலய நிருவாக முகாமையாளர் ஏல். நௌபீர் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வுகள் இப்போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.
சமுர்த்தி அபிவிருத்தி பிரிவின் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ. எல். எம். மக்பூல் அவர்களின் ஒருங்கிணைப்பில் இப்போட்டிகள் நடைபெற்றன.
சிறுவர்களிடையே மறைந்திருக்கும் பல்வேறு திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை ஊக்குவித்து வளர்ப்பதுடன், இலங்கை நாட்டின் பாரம்பரிய கலை, கலாசாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டு இப்போட்டி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் சமுர்த்தி கெகுலு சிறுவர் கழகங்களைச் சேர்ந்த சிறுவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர். சிறுவர்கள் தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலாசார மற்றும் கலை சார்ந்த போட்டிகளில் பங்கேற்றனர்.
பாடல், பேச்சு, கவிதை, நடனம், நாட்டார் பாடல், நாட்டார் நடனம், அறிவிப்பு, ஓவியம், கட்டுரை எழுதல் மற்றும் உறையுல் உள்ளிட்ட பல்வேறு கலைத்திறன்களை அடிப்படையாகக் கொண்ட போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், போட்டிகளில் பங்கேற்ற சிறுவர்கள் தங்களுடைய திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். ஒவ்வொரு போட்டியிலும் சிறுவர்களின் ஆர்வம் மற்றும் திறமைகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.
இந்நிகழ்வின் மூலம் சிறுவர்களிடையே தன்னம்பிக்கை, தலைமைத்துவப் பண்பு, குழு உணர்வு, படைப்பாற்றல், போட்டி மனப்பான்மை மற்றும் சமூகப் பொறுப்பு போன்ற முக்கியமான பண்புகளை வளர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், சிறுவர்களின் திறமைகளை வெறுமனே போட்டி மட்டத்திற்குள் மட்டுப்படுத்தாமல், எதிர்காலத்தில் அவர்களை சிறந்த ஆளுமைகளாக உருவாக்குவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தும் வகையிலும் இந்நிகழ்வு அமைந்தது.
பல பாடசாலை சிறுவர்கள் ஒன்றிணைந்து பங்கேற்றதன் மூலம் அவர்களிடையே நட்புறவு மற்றும் சமூக ஒருமைப்பாடும் வலுப்பெற்றது. தங்களுடைய திறமைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும், பிற சிறுவர்களின் திறமைகளை கண்டு கற்றுக்கொள்வதற்கும் இந்நிகழ்வு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
போட்டிகளில் பங்கேற்ற அனைத்து சிறுவர்களும் பாராட்டப்பட்டதுடன், சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய போட்டியாளர்கள் நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு எதிர்காலத்திலும் தங்களது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளும் வகையில் ஊக்கமும் பாராட்டும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திருமதி ஜுனைதா, செயற்திட்டம் முகாமையாளர் எம். எம். நப்ரிஸ், வலைய உதவி முகாமையாளர் அஷ்ஷேய்க் ஏ. நியாஸ் உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி மகா சங்க தவைவர் உட்பட பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
சிறுவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதுடன், அவர்களை சமூகத்தின் பொறுப்புள்ள மற்றும் திறமையான எதிர்கால தலைமுறையாக உருவாக்குவதில் இத்தகைய நிகழ்வுகள் முக்கிய பங்காற்றுகின்றன. அந்த வகையில், சமுர்த்தி கெகுலு சிறுவர் கழக கலாசாரப் போட்டி – 2026 சிறுவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் பயனுள்ள மற்றும் அர்த்தமுள்ள நிகழ்வாக அமைந்தது.
இப்போட்டிகள் க்கு நடுவர்களாக ஏ. எம். எம் சியாத் ( SLEAS, அபிவிருத்தி பிரதி பணிப்பாளர், சம்மாந்துறை கல்வி வலையம், ஏ. அமீர் (கிழக்கு மாகாண பணிப்பாளர், இளைஞர் சேவைகள் மன்றம்), எஸ். எல். நிசார் (பிரதி கல்வி பணிப்பாளர், சம்மாந்துறை கல்வி வலையம்), திருமதி ஐ. ஆர். எம். நஸீர் (ஓய்வு பெற்ற அதிபர்), திருமதி எம். எஸ். மஸாஹிரா (சிரேஷ்ட அறிவிப்பாளர், பிறை FM), ஏ ஆர். எம். ரஊப் (ஆசிரியர்), ரோஷான் ஏ. ஜிப்ரி (சிரேஷ்ட கவிஞர்) ஜே. ஹாறூன் (சிரேஷ்ட கவிஞர்), செயின் சித்தீக் (கலைஞர்) மற்றும் ஏ. எச். றகீப் (கலைஞர்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


















0 comments: