🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 தினச் சுடர் தேசிய விருதைப் பெற்றார் கண்டி இளம் எழுத்தாளர் இன்ஷிரா இம்தியாஸ்..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………………….
✅👉 தினச் சுடர் தேசிய விருது விழா-2026
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில், தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்,உலமாக் கட்சித் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தலைமையில் 02-08-2026 ம் திகதி மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஹாஷிம் உமர் பௌண்டேசன் ஸ்தாபகர் புரவலர் ஹாஷிம் உமர் கலந்து கொண்டு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
கலை மற்றும் ஊடகத் துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக
சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பிரிவை சேர்ந்த 20 ஆண் பெண் ஆளுமைகள் தினச்சுடர் தேசிய விருது பெற்று கெளரவிக்கப்பட்டனர்.
இதில் கண்டியினைச் சேர்ந்த இளம் எழுத்தாளரும் மற்றும் சமூக சேவையாளரும், பன்முக ஆளுமை கொண்டவரும் இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக அரசறிவியல் இறுதி ஆண்டு மாணவியுமான இன்ஷிரா இம்தியாஸ் ஊடக, சமூக சேவைத் துறையில் விருதை பெற்றுக்கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் தமிழன் பத்திரிகையின் இணை ஆசிரியர் ஏ.எம்.ஜௌபர்,பௌண்டேஷனின் பணிப்பாளர் மரியம், சுயாதீன தொலைக்காட்சி தமிழ் செய்திப் பிரிவு முன்னாள் செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை முன்னாள் மேலதிக பணிப்பாளர் எம்.இஸட்.அஹமட் முனவ்வர்,சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேதா,பௌண்டேஷனின் ஒருங்கிணைப்பாளர்களான ஆகிப் மொஹமட்,இஸ்ஸத் மற்றும் ஊடகவியலாளர் கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்



0 comments: