🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்முனை பொது சந்தை பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை ...!
✍️ எம்.என்.எம்.அப்ராஸ்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………..
✅👉 கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷகிலா இஸ்ஸதீன் அவர்களின் நெறிப்படுத்தலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஸஹ்ரா சாரப்தீன் வழிகாட்டலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியலத்தின் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.ரிஸ்பின் தலைமையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியலய பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கல்முனை மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து கல்முனை பொது சந்தை பகுதியில் சுகாதார பரிசோதனையை இன்று (05)மேற்க்கொண்டனர்.
இதன்போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற பழுதடைந்த மரக்கறி,பழ வகைகள் உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு சுகாதார விதிமுறைகளை மீறிய சில விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் சுகாதார விதிமுறைகள்,உணவு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தேவையான சுகாதார ஆலோசனைகள் அதிகாரிகளினால் வழங்கப்பட்டன.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்





0 comments: